திருச்சியில் டாஸ்மாக் அதிகாரிகள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக ஊழியர் வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் பாலகிருஷ்ணன் என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் டாஸ்மாக் அதிகாரிகள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகக் கூறி வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் டாஸ்மாக் அதிகாரிகள் மாத மாதம் லஞ்சம் வாங்குவதாகப் புகார் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தற்போது கூடுதலாகப் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். டாஸ்மாக் அதிகாரிகள் முதல் செந்தில் பாலாஜி வரை அனைவரையும் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.