சென்னிமலை முருகன் கோயிலில் சிறுவர், சிறுமிகள் மேற்கொண்டு வரும் கட்டைக்கால் கலை பயிற்சி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் உழவன் கலைக்குழு மூலம் கட்டைக்கால் கலையைப் பிரபலப்படுத்தி வருகிறார்.
அதன் ஒருபகுதியாக, சென்னிமலை முருகன் கோயிலில் உள்ள ஆயிரத்து 320 படிக்கட்டுகளில் சிறார்களுக்குக் கட்டைக்கால் கலை பயிற்சி வழங்கி வருகிறார்.
சுமார் 2 அடிக்கும் உயரமான கட்டைகளைக் கட்டியபடி சிறுவர், சிறுமிகள் கோயில் படிக்கட்டுகளில் ஏறியும், இறங்கியும் பயிற்சி பெறுகின்றனர்.
மேலும், கால்களில் கட்டைகளைக் கட்டியபடி வள்ளி கும்மி, சலங்கையாட்டம், பெருஞ்சலங்கையாட்டம் ஆடியும் அசத்தி வருகின்றனர்.