சென்னை எண்ணூரில் வீடு கட்டும் வேலைக்குப் பள்ளம் தோண்டும் போது கிடைத்த மர்மப் பொருள் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய குண்டாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
எண்ணூர் இராமகிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வரும் முஸ்தபா இப்பகுதியில் வீடு கட்டுவதற்காகப் பள்ளம் தோண்டியுள்ளார்.
அப்போது வெடிகுண்டு போல ஒன்று கிடைத்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அது இரண்டாம் உலகப் போரின் போது பீரங்கி மூலம் செலுத்திய குண்டாக இருக்குமோ எனக் கருவிகள் மூலம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.