திருப்பத்தூர் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே மல்லாக்கோட்டையில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் இரு தினங்களுக்கு முன்பு பாறை சரிந்து விபத்து ஏற்பட்டது.
இதில், ஆறுமுகம், கணேசன், ஆண்டிச்சாமி, முருகானந்தம், மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த பச்சா அரகித்தா ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மைக்கேல் என்பவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.