கொடைக்கானல் ரோஜா பூங்காவில் பழங்குடியினரின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளைச் சுற்றுலாப் பயணிகளைக் கண்டுகளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் உள்ள கீழ்மலை மற்றும் மேல்மலை கிராமங்களில் ஏராளமான பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.
அவர்களின் பாரம்பரிய நடனங்களைச் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, கொடைக்கானல் ரோஜா பூங்காவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில், பழங்குடியின மக்கள் பாரம்பரிய உடையணிந்து நடனமாடினர்.
சுற்றுலாப் பயணிகளும் அவர்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.