தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வைகை அணைக்கு வரும் தண்ணீர், கழிவுநீர் கலந்து பச்சை நிறமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
71 அடி உயரம் கொண்ட வைகை அணை, ஐந்து மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில், அணையின் நீர் தேக்கப்பகுதியில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி காட்சியளிக்கிறது.
இதற்கு அணைக்கு வரும் தண்ணீரில் கழிவுநீர் கலந்து வருவதே காரணமெனப் பொதுமக்களும் , சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் அணையில் கழிவுநீர் கலக்காதவாறு தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.