ரஷ்யாவுக்குத் தடைகளை விதித்து அச்சுறுத்த அதிபர் டிரம்ப் விரும்பவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், போர் நிறுத்த ஒப்பந்த விவகாரத்தில் காலதாமதம் எதுவும் ஏற்பட்டால், அதுவே ரஷ்யாவின் உண்மையான நோக்கம் என எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு அமைதி ஒப்பந்தத்தில் விருப்பம் இல்லாமல், தொடர்ந்து போரில் ஈடுபட விரும்பினால் அந்நாட்டுக்கு எதிராகப் புதிதாகத் தடைகளை விதிக்க சாத்தியம் உள்ளது என்றும் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.