டெல்லியில் பணியாற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர், தனது அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டதற்காக, 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறும்படி மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து டெல்லியில் பணியாற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகார ஒருவர் அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டதாக நாட்டை விட்டு வெளியேறும்படி கடந்த 13ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் மற்றொரு அதிகாரியையும் 24 மணி நேரத்திற்குள் வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தான் தூதர்கள் அல்லது அதிகாரிகள் அதிகாரத்தை மீறாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.