அமெரிக்காவுடன் இஸ்ரேலுக்கு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வான டிரம்ப், முதல் வெளிநாட்டுப் பயணமாக வளைகுடா நாடுகளுக்குச் சென்றார். ஆனால், நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்கு மட்டும் செல்லவில்லை.
இதனால், அமெரிக்காவுடன் இஸ்ரேலுக்கு மோதல் ஏற்பட்டதே, டிரம்ப் அந்நாட்டுக்குச் செல்லாததற்குக் காரணம் என்று செய்திகள் உலா வந்தன.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலுக்கு முழு ஆதரவு அளிப்பதாக டிரம்ப் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.