காசாவில் 11 வாரங்களில் மட்டும் பசி, பட்டினியால் 57 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் இதுவரை 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், இருப்பிடம், தண்ணீர், உணவு, மருந்து பொருட்கள் என அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் கடும் சிரமங்களை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 20 லட்சம் பேர் பசி, பட்டினியால் தவிப்பதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.