உலக நாடுகளின் புற அழுத்தத்திற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளைக் கூட அனுமதிக்காமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இதனால் பல அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இஸ்ரேலின் நடவடிக்கைக்கு, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நட்பு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
மேலும், இஸ்ரேலுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக இங்கிலாந்து அறிவித்தது. இந்நிலையில் உலக நாடுகளின் புற அழுத்தத்திற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.