தேர்தல் நிதி வழங்குவதை வரும் காலங்களில் பெருமளவில் குறைப்பேன் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் எலான் மஸ்க் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அடுத்த 5 ஆண்டுகளுக்கு டெஸ்லா நிறுவனத்தின் தலைவராக நீடிப்பேன் என்றும், அந்த இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக 2 ஆயிரத்து 500 கோடிக்கும் மேல் செலவு செய்த நிலையில், தேர்தல் நிதி வழங்குவதை வரும் காலங்களில் பெருமளவில் குறைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.