ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கி உள்ளது.
கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 2 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 1 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கும். இதன் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.