வெள்ளை இன மக்கள் படுகொலை தொடர்பாக தென்னாப்பிரிக்க அதிபருடன் டிரம்ப் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர், வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ஆப்பிரிக்காவில் வெள்ளை இன மக்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி ராமபோசாவிடம், டிரம்ப் காரசார விவாதத்தில் ஈடுபட்டார். டிரம்பின் இந்த குற்றச்சாட்டுகளை ராமபோசா மறுத்துள்ளார்.