அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தைப் பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தன.
அதன் ஒரு பகுதியாகத் திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையமானது 6 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டது. சிசிடிவி, வைஃபை வசதி, கூடுதல் தண்ணீர் குழாய்கள், பயணிகள் காத்திருப்பு அறைகள் போன்றவை பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீரங்கம் உட்பட 103 ரயில் நிலையங்களில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, அவற்றைக் காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வு, பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.