மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சல்மான்கானின் இல்லத்தில் அத்துமீறி நுழைய முயன்ற பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 20-ம் தேதி சத்தீஸ்கரைச் சேர்ந்த ஜித்தேந்திர குமார் என்பவர், சல்மான்கான் வீட்டைச் சுற்றி வந்துள்ளார்.
அப்போது காவலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் செல்போனை உடைத்துள்ளார். பின்னர் அதே கட்டடத்தைச் சேர்ந்த மற்றொரு நபருக்குச் சொந்தமான வாகனத்தின் மூலம் உள்ளே நுழைய முயன்றபோது போலீசாரிடம் சிக்கினார்.
இதேபோல் நேற்று மற்றொரு பெண் உரிய அனுமதியின்றி அந்த கட்டடத்தினுள் நுழைந்து, சல்மான்கான் வீட்டு வாசல் வரை சென்றதாக போலீசார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.