ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்காக முப்படையினர் மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து அரியலூர் மாவட்ட பாஜக சார்பில், தேசியக் கொடி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.
இதில், வணிகர்கள், தேசப் பற்றாளர்கள், பாஜக தொண்டர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
பாஜக மாவட்ட தலைவர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் தலைமையில் உடையார்பாளையத்தில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.