ஹைதராபாத் மாநிலம் சில்பராமம் கிராமத்திற்குச் சென்ற உலக அழகி போட்டியாளர்கள், பாரம்பரிய கைவினை கலைகளை கற்று மகிழ்ந்தனர்.
72வது உலக அழகிப் போட்டி தெலங்கானாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியானது வரும் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், உலக அழகிப் போட்டியாளர்கள் ஹைதராபாத் மாநிலம் சில்பராமம் கிராமத்திற்கு வருகை தந்தனர். அவர்களுக்குப் பூச்செண்டு வழங்கி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்களுக்குக் கைவினை கலைகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. கூடை பின்னுவது, வண்ணம் தீட்டுவது போன்ற செயல்பாடுகளில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். பின்னர் சிறுமிகளுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.