சேலம் மாவட்டம் மேச்சேரியில், வனப்பகுதி எல்லையில் உலா வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமசாமி மலை வனப்பகுதியின் வெத்தலைமலை அருகே உள்ள பாறையில் சிறுத்தை ஓய்வெடுத்ததைப் பார்த்த கிராம மக்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
எனினும், வனத்துறையினர் அங்கு ரோந்துப் பணியில் மட்டுமே ஈடுபடுவதாகவும், காலியான கூண்டுகளை வைப்பதால் சிறுத்தையைப் பிடிக்க முடியாது என்றும் மக்கள் கூறுகின்றனர்.