சிங்கப்பூரில் இருந்து விமான மூலம் கோவைக்கு வந்த கேரள இளைஞரிடம் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த விமான பயணிகளிடம் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பயணி ஒருவரின் பையில் 5 கிலோ உயர் ரக கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது ஃபைசில் என்பது தெரியவந்தது. பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியே கோவைக்கு அந்த இளைஞர் பயணம் செய்ததும் தெரியவந்தது.