சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் ரிலீஸ் டீசர் வெளியானது.
பெருசு படத்தின் வெற்றியை தொடர்ந்து வைபவ் அடுத்ததாகச் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர்.
அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடிப் படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது. அதன் ரிலீஸ் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
















