ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற இந்திய எம்.பி.,க்கள் குழுவினர், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அந்நாட்டு அரசிடம் விளக்கம் அளித்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு நேரில் சென்று விவரிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டன.
அந்த வகையில், சிவசேனா எம்.பி., ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்கு பயணம் மேற்கொண்டனர்.
இதையடுத்து அபுதாபிக்கு சென்ற குழுவினர் தேசிய ஊடக அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரல் ஜமால் முகமது ஒபைத் அல் காபியை சந்தித்துப் பேசினர்.