சத்தீஸ்கரில் நக்சல்களை கொன்ற வீரர்களுக்கு பெண்கள் வெற்றித் திலகமிட்டு வரவேற்பு அளித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மத் வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சல் முக்கிய தலைவர் பசவ ராஜூ உட்பட 27 பேரை மாவட்ட ரிசர்வ் படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில் ரிசர்வ் படை வீரர்களுக்கு பொதுமக்கள் வெற்றித் திலகமிட்டும், மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வீரர்கள் வெற்றிக் களிப்பில் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.