பாலியல் வன்கொடுமை குற்றங்களை திமுக அரசு மறைக்க முயல்வதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
அரக்கோணத்தில் கல்லூரி மாணவியை திமுக முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் பாலியல் வன்கொடுமை செய்ததற்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.
திமுக முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீது மாணவி புகார் அளித்தவுடன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும் அதை அப்படியே மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
அரக்கோணம் மாணவியின் புகார் குறித்து காவல்துறை தீர விசாரித்து குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த வழக்கில் தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.