கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் திறக்கப்பட்டது.
8 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சாமல்பட்டி ரயில் நிலையத்தை, பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல், சோனியா ஆகியோரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
இதற்கு அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, திமுக மற்றும் காங்கிரஸாருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்க்ளை அப்புறப்படுத்தினர்.