ஆழியார் அணை பகுதியில் உலாவரும் யானை கூட்டத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு ஏராளமான வன விலங்குகள் உள்ள நிலையில், வெயில் காரணமாக அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை கூட்டம் வனப் பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன. இந்நிலையில் ஆழியாறு அணை பகுதியில் உலா வரும் யானை கூட்டத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதனிடையே, ஆழியார் – வால்பாறை சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும் எனவும், வன விலங்குகளை கண்டால் புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.