திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏரியில் லேசர் லைட்டிங் ஷோ நடத்தப்பட்டதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா தொடங்கியதால் பல்வேறு மாநிலம் மாவட்டத்தில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் பேராசர்லிங் , ஏரி லேசர் லைட்டிங் சோ மற்றும் ரோஸ் கார்டனில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நேற்று மாலை ஏரியில் லேசர் ஷோ நடைபெறும் பொழுது பாடல்கள் இசைக்க ஒளிரும் லேசர் லைட் கண்டு கேரள மாநில இளைஞர்கள் நடனம் ஆடினர் மகிழ்ந்தனர்.