ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
யூத எதிர்ப்பு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக, உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக் கழகத்தில் சேர்ப்பது ஒரு சலுகையோ, உரிமையோ அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பு பழிவாங்கும் நடவடிக்கை என்றும், சர்வதேச மாணவர் திட்டங்களை அச்சுறுத்துவதாகவும், ஹார்வர்டு பல்கலைக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.