மேற்குவங்கத்தில் வேலையிழந்த அரசு ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டித்து, பாஜகவின் இளைஞர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்குவங்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் மாநில அரசுப் பள்ளிகளில் பணிபுரிய சுமார் 26 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் எழுந்த முறைகேடு புகாரில் திரிணாமுல் காங்கிரஸ் அரசைச் சேர்ந்த பலர் சிக்கினர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2016-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட சுமார் 26 ஆயிரம் பேரின் பணி நியமனம் செல்லாது எனச் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இதனால் முறைகேடு செய்யாமல் நேர்மையாகத் தேர்வானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வேலையிழந்த ஆசிரியர்கள் கடந்த வாரம் மேற்குவங்க மாநில கல்வித்துறை தலைமையகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆசிரியர்கள் மீது போலீசார் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இதனைக் கண்டித்து பாஜகவின் இளைஞர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.