பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதாகவும், முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும் வெளியான தகவலுக்கு சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மறுப்பு தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருக்கக்கூடிய நிலையில் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், தற்போது வீரியம் இல்லாத கொரோனா என்பதால் நோய் பரவலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் கொடுக்கப்படும் எனவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே சமூக வலைதளங்களில் பரவிய செய்திகள் அனைத்தும் தவறானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், முகக்கவசம் அணிவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை எந்த செய்தியும் உண்மைத்தன்மை உடையது இல்லை எனவும் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.