மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் மற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது சேகர் கர்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த பதிவை அவரே தனது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.