மதுரையில் நடைபெற்ற தனியார் பள்ளி வாகன ஆய்வை மாவட்ட ஆட்சியர் பெயரளவில் மட்டுமே நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோடை விடுமுறை முடிவடைந்து வரும் ஜூன் 5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மதுரையில் தனியார் பள்ளி வாகனங்களின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு நடத்தினார்.
ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும் எனவும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் 2 வாகனங்களில் மட்டுமே மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தியதாகவும் அதுவும் முறையாக நடத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.