நியூசிலாந்து வீரர் டிம் சீபர்ட்டை மாற்று வீரராகப் பெங்களூரு ஒப்பந்தம் செய்துள்ளது.
நடப்பு ஐ.பி.எல். சீசன் இந்தியா – பாகிஸ்தான் சண்டை காரணமாக ஒரு வாரக் காலம் நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும்போது 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதாவது மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ம் தேதி நடைபெறுகிறது. அந்த வரிசையில் பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரரான ஜேக்கப் பெத்தேல் கடைசி லீக் ஆட்டம் மற்றும் பிளே ஆப் சுற்றிலிருந்து விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக நியூசிலாந்து அதிரடி வீரரான டிம் சீபர்ட்டை மாற்று வீரராகப் பெங்களூரு ஒப்பந்தம் செய்துள்ளது.