சகுராஜிமா எரிமலை தொடர்ந்து சாம்பலை வெளியேற்றி வருகிறது.
ஜப்பானின் தெற்கு தீவான கியூஷுவில் உள்ள சகுராஜிமா எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெடித்து, சாம்பல் மற்றும் பாறைகளைக் கக்கியது.
இதன் காரணமாக வானில் புகை மண்டலங்கள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. மேலும், அப்பகுதியிலிருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பெரும்பாலான மக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.