7000mAh பேட்டரியுடன் ரெடியாகும் சியோமி 16 போன் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இதன் ஒட்டுமொத்த தோற்றம் அதன் முந்தைய மாடலை போலவே காட்சியளிக்கும் என்று தெரிகிறது.
ஆனால் இந்த ஸ்மார்ட்போன் டூயல் டோன் டிசைன் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
6.32-இன்ச் பிளாட் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 3 கொண்டிருக்கும் எனவும் தெரிகிறது.
இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறும் ஸ்னாப்டிராகன் நிறுவனத்தின் உச்சி மாநாட்டில் குவால்காம் நிறுவனம் இந்த பிராசஸரை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.