ரஷ்யா தனது அணு ஆயுதக் கிடங்கை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அளவை குறைக்க ரஷ்யா தனது அணு சக்தி கோட்பாட்டைத் திருத்திய சில மாதங்களுக்குப் பின் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அணு ஆயுதங்களைக் கையாள பெலாரஷ்ய பணியாளர்களுக்குத் தேவையான பயிற்சிகளை ரஷ்யா வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்யா கடந்த 2023-ம் ஆண்டு பெலாரஸில் தனது அணு ஆயுதங்களை நிலைநிறுத்தத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.