காசாவில் பல வாரங்களுக்குப் பின் வழங்கப்பட்ட ரொட்டியை வாங்கப் பாலஸ்தீன மக்கள் முண்டியடித்துக் கொண்டு அலைமோதிய காட்சி, காண்போரைக் கலங்க வைத்துள்ளது.
காசா நகரை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம்சிறிது தளர்வளித்துள்ளதை தொடர்ந்து, ஏறத்தாழ 11 வாரங்களுக்குப் பிறகு அங்கு மளிகை பொருட்கள் கொண்டு வரப்பட்டன.
புதிதாகச் சுடப்பட்ட ரொட்டியைப் பெறப் பொதுமக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு சென்றனர்.