சிவகங்கை மாவட்டம், மல்லாக்கோட்டையில் குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 20-ம் தேதி மல்லாக்கோட்டையில் இயங்கி வந்த கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து கல்குவாரியின் உரிமம் மாவட்ட ஆட்சியரால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதனிடையே தலைமறைவான குவாரி உரிமையாளர் மேகவர்ணம் உள்ளிட்டோர் மீது விஏஓ போலீசில் புகாரளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்தவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் கல்குவாரி மேற்பார்வையாளர்கள் கமலதாசன், கலையரசன், வாகன மேற்பார்வையாளர் ராஜ்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.