ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடரின் லக்னோவில் நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி, 19.5 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஐதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.