நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..
இந்தியாவில் ஒரே நாளில் 257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் மட்டும் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோட்டயத்தில் 57 பேர், எர்ணாகுளத்தில் 34 பேர், திருவனந்தபுரத்தில் 30 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழக எல்லையில் உள்ள தேனி மாவட்டத்தில் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாக வரும் கேரள பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.