பாஜக ஆட்சிக்கு வந்த 11 ஆண்டுகளில் பத்தாயிரத்திற்கும்அதிகமான நக்சலைட்டுகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அமைதிப்பாதையை தேர்ந்தெடுத்திருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற வடகிழக்கு மாநில முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய வடகிழக்கு மாநிலங்களில் வளர்ச்சியைக் கொண்டு வருவது அவசியமானது எனவும், வர்த்தகம், பாரம்பரியம், ஜவுளி, சுற்றுலா ஆகியவையோடு பன்முகத்தன்மையும் வடகிழக்கின் பலம் எனவும் கூறினார்.