நக்சலைட்டுகளுக்கு எதிராக அமித்ஷாவும், தீவிரவாதத்திற்கு எதிராகப் பிரதமர் மோடியும் போராடி வருவதாக மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் தானேயில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நக்சலிஸம் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை சத்தீஸ்கர் சம்பவம் அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.
தலைக்குக் கோடிக்கணக்கில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சலைட் பசவ ராஜு பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டிருப்பதாகப் பெருமிதமாகக் கூறிய ஏக்னாத் ஷிண்டே, நக்சலைட்டுக்கு எதிராக இதுபோன்ற ஒரு நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்பட்டது இல்லை எனத் தெரிவித்தார்.