அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார்.
அட்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் 5 நாயகிகள் நடிக்கவுள்ளனர். இதில் மிருணாள் தாகூர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பது உறுதியாகி இருந்தது.
அவர்களைத் தொடர்ந்து முக்கியமான நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதர 2 நாயகிகளில் ஒருவராக நடிக்க பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.