இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்கச் சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது.
தனக்கு வழங்கப்படும் நிதியைப் பாகிஸ்தான் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்த வாய்ப்புள்ளது எனவும், நிதி வழங்கும் முடிவை மீண்டும் பரிசீலிக்க வேண்டுமெனவும் இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், நிதி வழங்குவதற்கான அனைத்து இலக்குகளும் எட்டப்பட்டுள்ளதால், நிதி வழங்கும் முடிவு எடுக்கப்பட்டதாகச் சர்வதேச நாணய நிதியம் விளக்கம் அளித்துள்ளது.