கேரளாவில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு கருதி 3 மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.
கேரளாவில் 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதன் காரணமாக, காசர்கோடு, கண்ணூர், இடுக்கி மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டதோடு, படகு சவாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டன.
இதேபோல், நிலச்சரிவு மற்றும் பாறை சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மலை பாங்கான பகுதிகளில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பயணம் செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.
நீலம்பூர் ஆத்யன்பாரா, கருவரகுண்டு மற்றும் கேரளம் குண்டு நீர்வீழ்ச்சிகளுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.