திருப்பதியில் பக்தர்கள் விரைவாக ஏழுமலையானைத் தரிசனம் செய்யும் வகையில் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகப் பக்தர்கள் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் ஏ.ஐ தொழில்நுட்ப கண்காணிப்பு கேமரா நிறுவப்படவுள்ளதாகவும், இதன் மூலம் தரிசனம் செய்ய வரிசையில் நிற்கும் பக்தர்களின் விவரங்கள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பக்தர்களின் தரிசன நேரத்தைச் சரியாக அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.