ஆந்திராவில் செயல்பட்டு வரும் எஃகு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காட்சியளித்தது.
விசாகப்பட்டினம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்த ஆலையில் எஃகு உருக்கும் அமைப்பு-2-ல் ஏற்பட்ட தீ, மளமளவெனப் பற்றி எரிந்து மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காட்சியளித்த நிலையில், தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
இந்நிலையில், இயந்திரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.