கிராமங்களில் உள்ள ஓலைக் குடிசைகள் உட்பட அனைத்து வீடுகளுக்கும் பல மடங்கு சொத்து வரியை உயர்த்தியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் சொத்து வரியை உயர்த்தியதுடன், புதிய வரியை வசூலிக்க அதிகாரிகளை அரசு வற்புறுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஸ்டாலின் மாடல் அரசு, மக்களின் வயிற்றில் அடித்து, கொடுங்கோல் ஆட்சி நடத்தி வருவதாக விமர்சித்த அவர், பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரிகளை உயர்த்தி இருப்பதற்குக் கண்டனம் தெரிவித்தார். உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலினை அவர் வலியுறுத்தி உள்ளார்.