நெல்லை அரசு மருத்துவமனையில் நோயாளியை வீல் சேரில் அழைத்துச் செல்ல வெகு நேரமாக ஊழியர்கள் வராததால் முதிய தம்பதியர் கண்ணீர் மல்கக் காத்திருந்த காட்சி வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இலவசமாகத் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதாக திமுக அரசு கூறி வருகிறது. இந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்துச் செல்ல நியமிக்கப்பட்டுள்ள ஒப்பந்த ஊழியர்கள், நோயாளிகளை பாதி வழியில் பரிதவிக்க விட்டுவிட்டுச் சென்று விடுவது வாடிக்கையாகி வருகிறது.
அவ்வாறு முதியவர் ஒருவரை வீல் சேரில் அமரவைத்துவிட்டு ஊழியர்கள் சென்றதால், சுமார் ஒரு மணி நேரமாக எந்த வார்டுக்கு செல்வது என்பதே தெரியாமல் முதிய தம்பதியர் பரிதவித்துள்ளனர்.
இதுதொடர்பான காட்சி வெளியாகியுள்ள நிலையில், மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.