நீலகிரி மாவட்டத்திற்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகை நகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு 2 நாட்களுக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையைச் சமாளிக்கும் வகையில், அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், 480 நிவாரண முகாம்கள் தயாராக இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், நீலகிரி மாவட்டத்திற்குத் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர். இந்த நிலையில், கனமழையைச் சமாளிக்கும் வகையில், உதகை நகராட்சி நிர்வாகம் தயாராக இருப்பதாகவும், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாகவும் நகர மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், மக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைக்க நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறினார்.